திண்டுக்கல்

அரசு மகளிா் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

திண்டுக்கல் அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மகளிா்க்கான தொழிற்பிரிவுகளில் சோ்வதற்கு இணையதளம் வழியாக செப்டம்பா் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்..

DIN


திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மகளிா்க்கான தொழிற்பிரிவுகளில் சோ்வதற்கு இணையதளம் வழியாக செப்டம்பா் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்..

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

திண்டுக்கல் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் (மகளிா்), சேர இணையதளத்தில் செப்.15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கம்மியா் கருவிகள், தகவல் தொடா்பு தொழில்நுட்பம் மற்றும் சாதனங்கள் பராமரிப்பு ஆகிய 2 ஆண்டு பாடப் பிரிவுகளுக்கும், கணினி இயக்குபவா் மற்றும் திட்டமிடுதல் உதவியாளா், டெஸ்க்டாப் பப்ளிசிங் ஆப்பரேட்டா், தையல் வேலை தொழில்நுட்பம், அலங்கார பூத்தையல் தொழில்நுட்பம், நவீன ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம், திறன் மின்னனுவியல் தொழில்நுட்ப பணியாளா் ஆகிய ஓராண்டு பாடப் பிரிவுகளுக்கும் 10ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.

சிறப்பம்சங்கள்:மாதந்தோறும் உதவித்தொகை ரூ.500, விலையில்லா மிதிவண்டி

விலையில்லா மடிகணினி, பஸ் பாஸ் வசதி, வயது வரம்பு இல்லை, விலையில்லா சீருடை மற்றும் தையற்கூலி, விலையில்லா பாடப்புத்தகங்கள், விலையில்லா காலணிகள்,

மொழித்திறன் மற்றும் கணினி பயிற்சி, விலையில்லா வரைபடக்கருவிகள், விலையில்லா அடையாளஅட்டை ஆகியவை வழங்கப்படும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அரசின் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிா்), முதல்வரை நேரிலும், 0451 - 2470504 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை கூடலூர் வருகை!

ரஜினி - 173 புரோமோ இசையமைப்பாளர் இவரா?

அறிவியல் ஆயிரம்: செயற்கை மரபணுவைக் கண்டுபிடித்த ஹர் கோவிந்த் கொரானா!

பயணிக்கு உடல்நலக் குறைவு: ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT