முகப்பு
உலகம்

ஐக்கிய அரபு அமீரக துறைமுகங்களில் அடுத்தகட்ட தாக்குதல்: மக்கள் உடனடியாக வெளியேற ஈரான் வலியுறுத்தல்

அமீரக துறைமுகப் பகுதிகளில் இருக்கும் மக்கள் உடனடியாக வெளியேற ஈரான் வலியுறுத்தல்

Updated On : 14 மார்ச், 2026 at 10:23 PM
ஐக்கிய அரபு அமீரகத்தின் கோர் ஃபக்கான் கடற்கரையில் மக்கள் - AP
பகிர்:

ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய துறைமுகங்களில் அடுத்து தாக்குதல் நடத்தவிருப்பதால் துறைமுகங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேற ஈரான் இன்று(மார்ச் 14) வலியுறுத்தியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப். 28 வான்வழித் தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து வளைகுடா பகுதிகளில் அமெரிக்க படைகள் அமைந்துள்ள இடங்களிலும் ஈரான் தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், அமீரகத்தின் முக்கிய துறைமுகங்களான ஜேபெல் அலி துறைமுகம், காலிஃபா துறைமுகம், ஃப்யூஜைரா துறைமுகம் ஆகியவற்றின் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து மக்கள் வெளியேற ஈரான் வலியுறுத்தியிருப்பதாக அந்நாட்டின் டஸ்நீம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேற்கண்ட பகுதிகளிலேயே அமெரிக்க ராணுவ படைகள் அமைந்திருப்பதால் அப்பகுதிகளே ஈரான் படைகளால் முக்கிய இலக்குகளாக அடுத்தகட்ட தாக்குதல்களுக்கான குறிவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

summary

Iran’s News Agency has urged residents in the United Arab Emirates to immediately evacuate areas near major ports

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.