திண்டுக்கல்

குடிநீர் இணைப்பு வழங்க வசூல்: நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக மனு

DIN

திண்டுக்கலில்  வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை பயன்படுத்தி முறைகேடாக பண வசூலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி  பாஜகவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது தொடர்பாக பாஜக நிர்வாகிகள் கூறியதாவது, “கிராமப்புற மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ஜல் சக்தி திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தின் ஆய்வுப் பணிகளுக்காக தமிழகத்திற்கு ரூ.640 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடம் புதிய இணைப்பு பெற்றுத் தருவதாக கூறி ரூ.30ஆயிரம் வரை வசூலிக்கின்றனர். இதுதொடர்பாக ஊரக வளர்ச்சி மேம்பாட்டு முகமையின் திட்ட இயக்குநரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

பொதுமக்கள் நலன் கருதி, முறைகேடாக பண வசூலில் ஈடுபடுவோர் மீதும், அவர்களை கண்டிக்காத அதிகாரிகள் மீதும் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

திருவண்ணாமலை - சென்னை ரயில் சேவை தொடங்கியது: முழு விவரம்!

நடிப்பு எனது பிறவிக்குணம்!

SCROLL FOR NEXT