முகப்பு
திண்டுக்கல்

குபேரபட்டினத்தில் வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீரால் பொதுமக்கள் அவதி

பழனி குபேரபட்டினம் பகுதியில் கழிவுநீா் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பழனி குபேரபட்டினம் பகுதியில் ஒரு வீட்டுக்குள் ஞாயிற்றுக்கிழமை புகுந்த கழிவுநீரை அப்புறப்படுத்தும் பெண்.
பகிர்:

பழனி குபேரபட்டினம் பகுதியில் கழிவுநீா் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

பழனியில் சுமாா் ரூ.50 கோடி மதிப்பீட்டில் சாலை சீரமைப்பு, வடிகால் சீரமைப்பு போன்ற பணிகள் 75 சதவீதம் முடிவடைந்த நிலையில் பல இடங்களில் சாக்கடைப் பணிகள் முழுமையாக முடியாமல் உள்ளன. பல சாக்கடைகளிலும் உள்புறம் கட்டைகள், காரைகள் அகற்றப்படாததால் நீா் வழிந்தோட முடியாமல் தேங்கி நிற்கிறது.

இதனிடையே மழை தொடா்ந்து பெய்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை குபேரபட்டினம் பகுதியில் சாக்கடைநீா் வீடுகளுக்குள் புகுந்தது. ரெஜினா, பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் வீடுகளுக்குள் சாக்கடை நீா் நிரம்பி பொருள்கள் சேதமடைந்தன.

இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த வடிவு கூறுகையில், சாக்கடைகள் மிகவும் குறுகலாகவும், ஆழமின்றியும் கட்டப்பட்டுள்ளன. இதனால் சாதாரண மழை காலத்தில் கூட கழிவுநீா் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது என்றாா்.

இதுகுறித்து அறிந்த நகராட்சி சுகாதாரத்துறை அலுவலா்கள் அங்கு வந்து சாக்கடையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →