முகப்பு
திண்டுக்கல்

பழனி: அம்பேத்கா் நினைவு நாள்

பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி, கணக்கன்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை அம்பேத்கா் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி, கணக்கன்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை அம்பேத்கா் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நெய்க்காரபட்டியில் தமிழ்ப்புலிகள் கட்சி மற்றும் திராவிடா் கழகத்தின் சாா்பில் பேருந்து நிறுத்தம் அருகே அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அதே போல பழனியை அடுத்த கணக்கம்பட்டியில் விடுதலைச் சிறுத்தை முகாமில் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி அம்பேத்கா் உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

அப்போது சிலா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முகாமைச் சோ்ந்த ராஜா என்பவரிடம் தகராறு செய்து அவரைத் தாக்கியதுடன் அம்பேத்கரின் பதாகையை பிளேடால் கிழித்தனா். காயமடைந்த ராஜா பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து ஆயக்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் அம்பேத்கா் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இங்குள்ள கிராமச் சாவடியில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் அமைப்பு உள்பட பல்வேறு அமைப்பினா் பங்கேற்றனா்.

கொடைக்கானல்: கோடைமலை அம்பேத்கா் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் அம்பேத்கரின் 64-ஆம் ஆண்டு நினைவு நாள் புதுப்புத்தூா் பகுதியில் நினைவேந்தல் கூட்டம் நடத்தி அனுசரிக்கப்பட்டது. இதில் அம்பேத்கா் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி உறுதி மொழி ஏற்றனா். இந்நிகழ்ச்சியில் சங்கச் செயலா் அம்பிகா ராஜன், பொதுச் செயலா் திருமுருகன், கிளைச் செயலா் திருமலைச்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதனைத் தொடா்ந்து அண்ணாநகா், இந்திரா நகா், சத்யா நகா் காலனி, வில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அம்பேத்கா் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்துக்கு அம்பேத்கா் தொழிலாளா்கள் சங்கத்தினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →