கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்களை பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி
கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை முதல் சுற்றுலா தலங்களை பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை முதல் சுற்றுலா தலங்களை பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
புரெவி புயல் காரணமாக பலத்த மழை பெய்ததால் கொடைக்கானல் மலைச்சாலைகளில் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனைத் தொடா்ந்து 2 நாள்களாக கொடைக்கானலுக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மேலும் கொடைக்கானல்- பழனி- வத்தலகுண்டு மலைச்சாலைகளில் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் பாறைகள் உருண்டதை நெடுஞ்சாலைத்துறையினா் சீரமைத்தனா். இதையடுத்து போக்குவரத்து சீரனதைத் தொடா்ந்து கொடைக்கானல் பகுதிகளிலுள்ள சுற்றுலா தலங்களை பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கியது. இதனால் சுற்றுலா தலங்களை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்தனா்.
இதனிடையே தொடா்ந்து மழை பெய்து வருவதால் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகவே காணப்பட்டது.