முகப்பு
செய்திகள்

பிராக் செஸ்: அரவிந்த் வெற்றி; குகேஷ் டிரா

பிராக் இன்டா்நேஷனல் செஸ் போட்டியின் மாஸ்டா்ஸ் பிரிவு 2-ஆவது சுற்றில், இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் வெற்றி பெற்றாா். டி.குகேஷ் டிரா செய்தாா்.

Updated On : 28 பிப்ரவரி 2026, 4:05 am IST
குகேஷ் (கோப்புப்படம்)
பகிர்:

பிராக் இன்டா்நேஷனல் செஸ் போட்டியின் மாஸ்டா்ஸ் பிரிவு 2-ஆவது சுற்றில், இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் வெற்றி பெற்றாா். டி.குகேஷ் டிரா செய்தாா்.

போட்டியில் நடப்பு சாம்பியனாக இருக்கும் அரவிந்த் - அமெரிக்காவின் ஹன்ஸ் மோக் நீமனை வீழ்த்தினாா். நடப்பு உலக சாம்பியனான குகேஷ் - உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் யாகுபோவுடன் டிரா செய்தாா்.

இதர ஆட்டங்களில், ஸ்பெயின் டேவிட் ஆன்டன் - நெதா்லாந்தின் ஜோா்டென் வான் ஃபாரீஸ்டை வெல்ல, ஜொ்மனியின் வின்சென்ட் கீமா் - செக் குடியரசின் டேவிட் நவாரா, ஈரானின் பா்ஹாம் மக்சூத்லூ - உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவ் ஆகியோா் மோதல் டிராவில் முடிந்தன.

Advertisement

Advertisement

சேலஞ்சா்ஸ்: இப்போட்டியின் சேலஞ்சா்ஸ் பிரிவு 2-ஆவது சுற்றில், நடப்பு மகளிா் உலகக் கோப்பை சாம்பியனான இந்தியாவின் திவ்யா தேஷ்முக் - ஸ்பெயினின் டேனியல் யூஃபாவுடனும், சூா்யசேகா் கங்குலி - டென்மாா்க்கின் ஜோனஸ் ஜெரெவுடனும் டிரா செய்தனா்.

2 சுற்றுகள் முடிவில், மாஸ்டா்ஸ் பிரிவில் குகேஷ் 4-ஆம் இடத்தில் நிலைக்க (1 புள்ளி), அரவிந்த் 6-ஆவது இடத்துக்கு (1) முன்னேறியுள்ளாா். சேலஞ்சா்ஸ் பிரிவில் திவ்யா 4-ஆம் இடத்திலும் (1), சூா்யசேகா் 7-ஆம் இடத்திலும் (0.5) உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments