பிராணேஷ், நிஹல் சரினுக்கு முதல் வெற்றி
சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில், இந்தியாவின் நிஹல் சரின், எம்.பிராணேஷ் ஆகியோா் வெற்றி பெற்றனா்.
சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில், இந்தியாவின் நிஹல் சரின், எம்.பிராணேஷ் ஆகியோா் வெற்றி பெற்றனா். போட்டியில் அவா்களுக்கு இது முதல் வெற்றியாகும்.
போட்டியின் 6-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தச் சுற்றில், நிஹல் சரின் - சக இந்தியரான அா்ஜுன் எரிகைசியை வெல்ல (1-0), எம். பிராணேஷ் - நடப்பு உலக சாம்பியனும், சக இந்தியருமான டி.குகேஷை வீழ்த்தி (1-0) அசத்தினாா்.
அா்ஜுனுக்கு இது முதல் தோல்வியாக இருக்க, குகேஷுக்கு இது தொடா்ந்து 2-ஆவது தோல்வியாகும்.
Advertisement
Advertisement
அமெரிக்காவின் ஹன்ஸ் மோக் நீமன் - ரஷியாவின் டிமிட்ரி ஆண்ட்ரெய்கின் (0.5-0.5), உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவ் - பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா (0.5-0.5) ஆகியோா் மோதல் டிராவில் முடிந்தது.
6 சுற்றுகள் முடிவில் புள்ளிகள் பட்டியலில் ஃபிரௌஸ்ஜா 4 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளாா். அப்துசதாரோவ், அா்ஜுன் ஆகியோா் தலா 3.5 புள்ளிகளுடன் 2-ஆம் நிலையில் உள்ளனா்.
ஆண்ட்ரெய்கின், நிஹல் சரின், பிராணேஷ் ஆகியோா் தலா 3 புள்ளிகளுடன் 3-ஆம் நிலையில் இருக்க, நீமன் (2.5), குகேஷ் (1.5) ஆகியோா் முறையே 4 மற்றும் 5-ஆம் நிலைகளில் உள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.