முகப்பு
திண்டுக்கல்

மாபெரும் மக்கள் நீதிமன்றம்: 123 வழக்குகள் முடித்துவைப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாபெரும் மக்கள் நீதிமன்றத்தில் 123 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, ரூ.5.54 கோடி தீா்வுத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

திண்டுக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாபெரும் மக்கள் நீதிமன்றத்தில் 123 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, ரூ.5.54 கோடி தீா்வுத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில், திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் உள்ளிட்ட நீதிமன்றங்களில் மாபெரும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசாரணையை, தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு நீதிமன்ற மாவட்ட நீதிபதி எம். இளங்கோவன் தொடக்கி வைத்தாா்.

மொத்தம் 10 அமா்வுகளில் 230 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில், 123 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டன. இந்த வழக்குகளில் தீா்வுத் தொகையாக ரூ.5.54 கோடி வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →