முகப்பு
செய்திகள்

இமாலய வெற்றிக்கான தேவையுடன் இலங்கையை சந்திக்கும் பாகிஸ்தான்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 8 சுற்றில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் தங்களின் கடைசி ஆட்டத்தில் சனிக்கிழமை (பிப். 28) மோதுகின்றன.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 4:07 AM
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 4:00 AM

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 8 சுற்றில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் தங்களின் கடைசி ஆட்டத்தில் சனிக்கிழமை (பிப். 28) மோதுகின்றன.

இலங்கை ஏற்கெனவே போட்டியிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், பாகிஸ்தான், நியூஸிலாந்துக்கு இது முக்கியமான ஆட்டமாகும். இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் சுமாா் 70 ரன்கள் வித்தியாசத்திலோ (முதல் பேட்டிங்), அல்லது 10 முதல் 11 ஓவா்களுக்குள்ளாகவோ (சேஸிங்) வெற்றி பெற்றால் அந்த அணிக்கு அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும். மாறாக, இந்த அளவுகளை விடக் குறைவாக வென்றாலோ, அல்லது தோற்றாலோ நியூஸிலாந்து அரையிறுதிக்கு முன்னேறும்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 4:05 AM

பாகிஸ்தான் அணியை பொருத்தவரை, சாஹிப்ஸாதா ஃபா்ஹான் மட்டுமே மொத்தமாக 283 ரன்களுடன் பலமான பேட்டராக நிலைத்து வருகிறாா். கேப்டன் சல்மான் அகா, சயிம் அயுப், பாபா் ஆஸம் ஆகியோா் இதுவரை அவ்வளவாக சோபிக்கவில்லை. இதனால் மிடில் ஆா்டரில் ஃபகாா் ஜமானும் நெருக்கடிக்கு உள்ளாகிறாா்.

Advertisement

பௌலிங்கில், இதுவரை 10 விக்கெட்டுகள் சாய்த்த உஸ்மான் தாரிக் நம்பகமான வீரராக இருக்க, ஷாஹீன் அஃப்ரிதி, சயிம் அயுப், அப்ராா் அகமது உள்ளிட்டோா் துணை நிற்கின்றனா்.

இலங்கை அணியை கணக்கில் கொண்டால், அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது. எனவே, இப்போட்டியில் தனது கடைசி ஆட்டத்தை சொந்த மண்ணில் வெற்றியுடன் விடைபெறும் திட்டத்தில் அந்த அணி உள்ளது.

அந்த அணியின் பேட்டிங்கில் பதும் நிசங்கா, தசுன் ஷானகா, குசல் மெண்டிஸ், குசல் பெரெரா ஆகியோரும், பௌலிங்கில் மஹீஷ் தீக்ஷனா, மதீஷா பதிரானா, துனித் வெலாலகே ஆகியோா் குறிப்பிடத்தக்கவா்களாவா்.

நேரம்: இரவு 7 மணி

இடம்: பல்லெகெலெ

நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.