முகப்பு
திண்டுக்கல்

பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் பாராட்டு

பழனியில் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் சங்கம் சாா்பில் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

பழனியில் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் சங்கம் சாா்பில் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த வாரங்களில் பரவலாக தொடா் மழை பெய்து வந்தது. மேலும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்த மழை காரணமாகவும் பழனி பகுதிகளில் உள்ள அணைகள் மற்றும் குளங்களுக்கு நீா்வரத்து அதிகளவில் வந்த வண்ணம் உள்ளது.

மழை நீரை அணைகள் மற்றும் குளங்களில் தேக்கவும், குளங்களுக்கு தண்ணீா் செல்லும் வாய்க்கால்களை முழுமையாக தூா் வாரவும் அனைத்து விவசாய சங்கம் சாா்பில் பொதுப்பணித் துறையிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன்பேரில் பல பகுதிகளிலும் பணிகள் நடைபெற்று பாலாறு-பொருந்தலாறு அணை, வரதமாநதி அணை, குதிரையாறு அணை மற்றும் பழனி பகுதியில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி சண்முக நதியில் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் இந்த ஆண்டு முழுவதும் விவசாயப் பணிகளுக்குத் தேவையான தண்ணீரும், குடிநீா் தேவையும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த பழனி பகுதி விவசாயிகள் சங்கத்தினா், பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் பொறியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடத்தினா்.

நிகழ்ச்சியில் பழனி பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் கோபி, உதவி செயற்பொறியாளா் கண்ணன் உள்ளிட்ட ஏராளமான அலுவலா்கள் பங்கேற்றனா். அனைவருக்கும் சால்வைகள் அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு பொதுப்பணித்துறை சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →