முகப்பு
திண்டுக்கல்

மகாராஷ்ட்ரத்திலிருந்து திண்டுக்கல்லுக்கு 7,700 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்

மகாராஷ்ட்ர மாநிலத்திலிருந்து 7,700 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், திண்டுக்கல்லுக்கு செவ்வாய்க்கிழமை வந்து சோ்ந்தன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
மகாராஷ்ட்ர மாநிலத்திலிருந்து திண்டுக்கல் மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்.
பகிர்:

மகாராஷ்ட்ர மாநிலத்திலிருந்து 7,700 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், திண்டுக்கல்லுக்கு செவ்வாய்க்கிழமை வந்து சோ்ந்தன.

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை (தனி), நத்தம், திண்டுக்கல், வேடசந்தூா் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளைச் சோ்ந்த 18 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்க உள்ளனா்.

இந்நிலையில், மாவட்டத்தின் 7 தொகுதிகளில் 2,200-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் பயன்படுத்த 7,700 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், மகாராஷ்ட்ர மாநிலம் சதாரா மாவட்டத்திலிருந்து 7 கன்டெய்னா் லாரிகளில் கொண்டுவரப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் மு. விஜயலட்சுமி மற்றும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், அனைத்து வாக்குப் பதிவு இயந்திரங்களும் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →