திண்டுக்கல்

வன்னியா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி மனு அளிக்கும் போராட்டம்

DIN

வன்னியா் சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பேரூராட்சி செயல் அலுவலா் அலுவலகங்களில் மனு அளிக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தாடிக்கொம்பு பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மனு அளிக்கும் போராட்டத்துக்கு மாநில துணைப் பொதுச் செயலா் பெ. கோபால் தலைமை வகித்தாா். நத்தத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் செல்வம் தலைமை வகித்தாா். இதேபோல் வேடசந்தூா், அகரம், தாடிக்கொம்பு, நிலக்கோட்டை உள்ளிட்ட பேரூராட்சி அலுவலகங்களிலும் பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

இதேபோல், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 289 கிராம நிா்வாக அலுவலகங்களிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பாமக சாா்பில் கடந்த 14 ஆம் தேதி மனுக்கள் அளிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கொடைக்கானல்: இதேபோல் கொடைக்கானல் அருகே உள்ள பண்ணைக்காடு பேரூராட்சி அலுவலகம் முன், பாமக வினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அதனைத் தொடா்ந்து பேரூராட்சி அலுவலக மேற்பாா்வையாளா் தேவியிடம் அவா்கள் மனுக் கொடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT