முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 8,752 கொலைகள்! இதில் 1,977 பெண்கள்!

பெண்களுக்கு எதிராக 44 ஆயிரம் குற்றங்கள் பதிவாகியுள்ளன. இதில் 2,200 பாலியல் குற்றங்கள்.

Updated On : 11 மார்ச், 2026 at 4:32 PM
கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 8,752 கொலைகள் நடந்துள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் பஞ்சபூரில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டத்தில் அன்புமணி இன்று (மார்ச் 11) கலந்துகொண்டு உரையாற்றினார்.

இதில், திமுகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது? எனக் குறிப்பிட்டு அன்புமணி பேசியதாவது:

''கடந்த 5 ஆண்டு காலத்தில் 8,752 கொலைகள் நடந்துள்ளன. இந்தியாவிலேயே அதிக கொலைகள் நடந்த மாநிலம் தமிழ்நாடு. 1,977 பெண்களும், 361 குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர். 38 பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் காரணம் திமுக அரசு.

திமுக அரசு, மதுபானங்களை விற்கவில்லை, மதுவை திணித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே அதிக மதுபானம் விற்கும் மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவிலேயே மதுவால் அதிக விபத்துகள் ஏற்படும் மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவிலேயே மதுவால் கல்லீரல் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு.

கடந்த 5 ஆண்டு காலத்தில் பெண்களுக்கு எதிராக 44 ஆயிரம் குற்றங்கள் பதிவாகியுள்ளன. இதில் 2,200 பாலியல் குற்றங்கள். மதுராந்தகத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தப்பியுள்ளது ஒரு மனித மிருகம்.

4 வாரங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரியில் இரண்டரை வயது குழந்தையை ஒரு மிருகம் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்துள்ளது. அவர் திமுக இளைஞரணியைச் சேர்ந்தவர் எனக் கூறுகிறார்கள்.

கும்மிடிப்பூண்டி சம்பவம், அண்ணா பல்கலைக் கழக சம்பவம் என ஏகப்பட்ட பாலியல் குற்றங்கள். இவற்றை முதல்வர் மு.க. ஸ்டாலின் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார். இத்தகைய மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என, மூன்று மகள்களின் தந்தையாக உங்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.

நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் போதைப் பொருள்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. விவசாயிகளின் தற்கொலை திமுக ஆட்சியில் அதிகரித்துள்ளது.

மத்தியிலும் நமது ஆட்சி, மாநிலத்திலும் நமது ஆட்சி இருக்க வேண்டும். ஒரு விவசாயியை முதல்வராகக் கொண்டுவர வேண்டும். இரண்டு மாதங்களில் எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்'' எனக் கேட்டுக்கொண்டார்.

summary

8,752 murders in Tamil Nadu in the last 5 years! Of these, 1,977 were womens

முழு கட்டுரையைப் படிக்க →