தீபாவளியன்று 8 கொலைகள் மட்டுமே! தமிழ்நாடு காவல்துறை விளக்கம்
தீபாவளியன்று 8 கொலைகள் மட்டுமே நடந்துள்ளதாக தமிழ்நாடு காவல்துறை விளக்கம் கொடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் தீபாவளியன்று 8 கொலைகள் மட்டுமே நடந்திருப்பதாக தமிழ்நாடு காவல்துறை விளக்கம் கொடுத்துள்ளது.
முன்னதாக, தமிழ்நாட்டில் தீபாவளியன்று 11 கொலைகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்த நிலையில், தமிழ்நாடு காவல்துறை இந்த விளக்கத்தை அளித்திருக்கிறது.
தேனியில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர், திருவள்ளூரில் இளம்பெண், திருச்சி ஐடி ஊழியர் என பல்வேறு மாவட்டங்களிலும் கொலைகள் நடந்திருப்பதாக அடுத்தடுத்து செய்திகள் வெளியாகின. இதற்கு எதிர்க்கட்சிகளும் தங்களது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்கள்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தீபாவளியன்று நடந்த கொலைகள் மற்றும் இதற்கு முந்தைய காலக்கட்டங்களின் தரவுகளையும் தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறை இது குறித்துக் கூறியிருப்பதாவது, கடந்த ஆண்டுகளிலும் தீபாவளி நாள்களில் கொலைகள் நடந்துள்ளன. கடந்த 2022-ஆம் ஆண்டில் 9 கொலைகள், 2023- ஆம் ஆண்டில் 4 கொலைகள் நடந்துள்ளன. நவம்பர் 8ஆம் தேதி நள்ளிரவுக்குப் பின் நடந்த கொலைகளும், தீபாவளியன்று நடந்ததாகக் கணக்கில் கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.