FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தீபாவளி! தமிழ்நாட்டில் நாளை நியாயவிலைக் கடைகள் இயங்கும்!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் நாளை நியாயவிலைக் கடைகள் இயங்கும் என அறிவிப்பு

நியாயவிலைக் கடைகள் - ENS
பகிர்:

ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் நாளை நியாயவிலைக் கடைகள் இயங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு முதல் மற்றும் இரண்டாவது வெள்ளிக்கிழமைகள் விடுமுறை நாளாகவும், அதற்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமைகள் வேலை நாளாகவும் இருக்கும் நிலையில், தீபாவளிப் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வந்திருப்பதால், வெள்ளிக்கிழமை நியாய விலைக் கடைகள் செயல்படுமா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்திருந்தது.

இந்த நிலையல், தமிழ்நாட்டின் உணவுப் பொருள் வழங்கல் துறை வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் செயல்படும் நியாய விலைக் கடைகளுக்கு மாதத்தின் முதல் மற்றும் இரண்டாம் வெள்ளிக்கிழமை விடுமுறை நாள்.

Advertisement

Advertisement

அதுபோல, மாதத்தின் முதல் மற்றும் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமை வேலை நாள்கள் என்பது நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (08.11.2026) அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசியப் பொருள்கள் பெறுவதற்கு ஏதுவாக இம்மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான (06.11.2026) அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்று உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் அறிவித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

summary

Diwali Fair price shops in Tamil Nadu will remain open tomorrow

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.