FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது பற்றி...

15 அக்டோபர் 2026, 12:38 pm IST
மழை - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாடு, கேரளம், புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கடந்த ஒரு மாதமாக வாட்டி வதைத்த வெய்யிலால் மக்கள் செய்வதறியாது தவித்து வந்தனர்.

இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று மாலை பரவலாக மழை பெய்திருந்த நிலையில், இன்றும் பல இடங்களில் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

Advertisement

Advertisement

இதனிடையே, முற்பகல் 11.30 மணிக்கு சென்னையில் அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, மதுரவாயல், வளசரவாக்கம், வானகரம், நெற்குன்றம், போரூர், ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் சுமார் அரை மணிநேரம் கனமழை கொட்டித் தீர்த்தது.

இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகி, தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திர கடலோரப் பகுதிகள், ராயலசீமா, கர்நாடகத்தின் தெற்கு உள்பகுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இன்னும் சில நாள்களில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

summary

The Northeast monsoon has begun in Tamil Nadu!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments