வடகிழக்கு பருவமழை: முதல்வர் விஜய் அவசர ஆலோசனை!
வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதல்வர் விஜய் ஆலோசனை....
வடகிழக்கு பருவமழை தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் இன்று (அக். 21) ஆலோசனை மேற்கொள்கிறார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் நேற்று விடிய விடிய மழை பெய்தது.
இதையடுத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தியிருந்தார்.
Advertisement
Advertisement
இந்நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
மழை பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Northeast Monsoon: Chief Minister Vijay meeting with ministers, officials
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.