சென்னைக்கு நற்செய்தி! 3 நாள்களில் வடகிழக்கு பருவமழை!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது பற்றி...
தமிழ்நாட்டில் இன்னும் மூன்று நாள்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தமிழ்நாடு அரசின் எல் - நினோ வல்லுநர் குழு உறுப்பினர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாட்டு பணிகளை மாநில அரசும் மாவட்ட நிர்வாகங்களும் தீவிரமாக செய்து வருகின்றன.
இந்த நிலையில், இன்னும் 3 நாள்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் நிலவுவதாக பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”இறுதியாக, ஒரு நல்ல செய்தி. வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15-ஆம் தேதி (ஓரிரு நாள்கள் முன், பின்) தொடங்க வாய்ப்புள்ளது. செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் சென்னையில் மழை பெய்யவில்லை. எனவே, சென்னைக்கும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும் நல்ல மழைப்பொழிவு மிகவும் அவசியமாகத் தேவைப்படுகிறது.
வளிமண்டல சுழற்சிஒன்று தமிழ்நாட்டை நெருங்கி வருவதால், அது வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த, நம்மை காக்கவரும் பருவமழையை மனதார வரவேற்போம். இந்த வளிமண்டல சுழற்சியால் புயல் ஆபத்து ஏதுமில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
Good news for Chennai! Northeast monsoon in three days!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.