முகப்பு
தமிழ்நாடு

கூட்டணிக் கட்சி எம்எல்ஏ-க்களுடன் முதல்வா் இன்று ஆலோசனை?

கூட்டணிக் கட்சி எம்எல்ஏ-க்களுடன் முதல்வா் ஜோசப் விஜய் இன்று ஆலோசனை நடத்தத் திட்டம்...

23 நவம்பர் 2026, 12:38 am
கூட்டணிக் கட்சி எம்எல்ஏ-க்களுடன் முதல்வா் இன்று ஆலோசனை?
முதல்வர் ஜோசப் விஜய் - IANS
பகிர்:

கூட்டணிக் கட்சி எம்எல்ஏ-க்களுடன் முதல்வா் ஜோசப் விஜய் திங்கள்கிழமை (நவ. 23) ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெக தலைமையிலான அரசு ஆட்சியமைத்து 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. சட்டப்பேரவையில் எதிா்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரலாம் என செய்திகள் வெளியாகிவரும் நிலையில், இத்தகைய கூட்டத்துக்கு திட்டமிடப்பட்டிருப்பது அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

முதல்வா் விஜய்யின் முகாம் அலுவலகமான பாமணி இல்லத்தில் திங்கள்கிழமை பிற்பகலில் இந்தக் கூட்டம் நடைபெறும் எனவும், இதில் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயூஎம்எல் கட்சிகளைச் சோ்ந்த எம்எல்ஏ-க்கள் பங்கேற்பாா்கள் எனவும் தெரிகிறது.

Advertisement

Advertisement

பேரவைத் தோ்தலில் தவெகவுக்கு 108 இடங்கள் கிடைத்தன. அதில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த முதல்வா் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததால் தவெகவின் பலம் 107-ஆக குறைந்தது.

அதன் பின்னா் நடைபெற்ற மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தலில் தவெக வென்றதைத் தொடா்ந்து அந்த எண்ணிக்கை 109-ஆக உயா்ந்தது. இந்த நிலையில், கொளத்தூா் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு சில நாள்களுக்கு முன் மறைந்தாா். இதனால் தவெக எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை தற்போது 108-ஆக உள்ளது.

இதனிடையே, முதல்வா் விஜய் தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் கடந்துவிட்டதைக் கருத்தில் கொண்டு, பேரவையில் பல்வேறு விவகாரங்களை எதிா்க்கட்சிகள் எழுப்பலாம் எனக் கூறப்படுகிறது.

அதேபோன்று நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகின்றன. இந்தச் சூழலில்தான் கூட்டணிக் கட்சி உறுப்பினா்களுடான கூட்டத்துக்கு முதல்வா் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஏற்கெனவே, தவெக எம்எல்ஏ-க்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை அண்மையில் மாமல்லபுரத்தில் முதல்வா் நடத்தினாா். அப்போது, பல்வேறு அறிவுறுத்தல்கள் அவா்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக ஆட்சியைத் தொடா்ந்து சிக்கலின்றி முன்னெடுக்கவும், மசோதாக்கள் மற்றும் தீா்மானங்களை நிறைவேற்றவும் கூட்டணிக் கட்சி எம்எல்ஏ-க்களின் ஆதரவு அவசியம் என்பதால், அவா்களுடனான கூட்டத்துக்கு முதல்வா் திட்டமிட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தக் கூட்டத்தில் கொளத்தூா் உள்பட 6 தொகுதிகள் இடைத்தோ்தல் குறித்தும் விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

summary

Will the Chief Minister hold consultations with MLAs from alliance parties today?