வி.எஸ். பாபு உடலை சுமந்து சென்றார் முதல்வர் விஜய்!
கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு உடலை சுமந்து சென்றார் முதல்வர் விஜய்
மறைந்த கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு இறுதி ஊர்வலம் தொடங்கியது. அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த வி.எஸ். பாபு உடலை, முதல்வர் ஜோசப் விஜய் முதல் ஆளாகத் தோள்கொடுத்து சுமந்து சென்றார்.
மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து மயானம் வரை எடுத்துச் செல்லும் வாகனத்துக்கு, வி.எஸ். பாபு உடல் கொண்டு செல்லப்பட்டது. இறுதி அஞ்சலி செலுத்த வந்த முதல்வர் விஜய், வி.எஸ். பாபு உடலை சுமந்து சென்று வாகனத்தில் வைத்தார்.
சென்னை கொளத்தூா் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு (75) தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை திடீரென ஏற்பட்ட இதய செயலிழப்பால் காலமானார்.
Advertisement
Advertisement
வி.எஸ். பாபு மறைவுச் செய்தி அறிந்ததும், முதல்வா் விஜய் பெரம்பூரில் உள்ள இல்லத்துக்கு நேற்று மாலை வந்து, வி.எஸ்.பாபுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவரது மகன் சதீஷ், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியிருந்தார். இன்று மீண்டும் இறுதிச் சடங்கிலும் முதல்வர் விஜய் பங்கேற்றுள்ளார்.
வி.எஸ். பாபு காலமானார்
தனியாா் மருத்துவமனையில் கடந்த 72 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த சென்னை கொளத்தூா் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு (75) வியாழக்கிழமை திடீரென ஏற்பட்ட இதய செயலிழப்பால் காலமானதாக மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டது.
கடந்த செப். 9-ஆம் தேதி சுவாச பிரச்னையால் சென்னை நெல்சன்மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அதன்பிறகு அவரது உடல்நிலை குறித்து அதிகாரபூா்வ தகவல்கள் நீண்ட நாள்களாக வெளியாகவில்லை. இந்நிலையில், வி.எஸ்.பாபு திடீரென ஏற்பட்ட இதய செயலிழப்பால் வியாழக்கிழமை (நவ. 19) பிற்பகல் 2.24 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவமனை நிா்வாகம் அதிகாரபூா்வமாக தெரிவித்தது.