FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வி.எஸ். பாபு மறைவு! 7 நாள் துக்கம் அனுசரிப்பு: தவெக அறிவிப்பு

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் மறைவையடுத்து, தவெக சார்பில் 7 நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுவது குறித்து...

முதல்வர் விஜய்யுடன் வி.எஸ். பாபு - கோப்புப் படம்
பகிர்:

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் மறைவையடுத்து, தவெக சார்பில் 7 நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை பாதிக்கப்பட்டு சுமார் 70 நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், வியாழக்கிழமை மதியம் 2.24 மணியளவில் வி.எஸ். பாபு சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவரது மறைவுக்கு முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதல்வர்கள் மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

மேலும், முதல்வர் விஜய் நாளை (நவ. 20) திருச்சி செல்லவிருந்த நிலையில், முதல்வரின் பயணம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், அடுத்த 7 நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுவதாக தவெக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தவெக பொதுச் செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, "சென்னை, கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி தவெக உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

இதனையடுத்து, இன்று முதல் ஏழு நாட்களுக்கு கழகத்தின் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

மேலும் இந்த ஏழு நாட்களுக்கும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, கழகக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதை முதல்வரும் தவெக தலைவருமான விஜய்யின் ஒப்புதலோடு தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

TVK announces a 7-day mourning period following the passing of Kolathur MLA V.S. Babu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.