தவெக கூட்டணி, ஆதரவுக் கட்சி எம்எல்ஏ-க்களுடன் முதல்வர் ஆலோசனை?
தவெக கூட்டணி, ஆதரவுக் கட்சி எம்எல்ஏ-க்களுடன் முதல்வர் விஜய் நாளை ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல்...
தவெக கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சி எம்எல்ஏ-க்களுடன் முதல்வர் விஜய் நாளை ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சியமைக்க காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளும் இடதுசாரி கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவும் தெரிவித்தன.
இதனிடையே, தவெக அமைத்த மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், மதிமுகவும் இணைந்தன. இருப்பினும், இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து வெளியில் இருந்து ஆதரவளித்து வருகின்றன.
Advertisement
Advertisement
ஜூலை 1-ல் தவெக கூட்டணிக் கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இடதுசாரிகள் கட்சிகள் கலந்துகொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து, செப். 9-ல் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், தவெக கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சி எம்எல்ஏ-க்களுடன் முதல்வர் விஜய்யின் முகாம் இல்லத்தில் நாளை (நவ. 23) ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், இடதுசாரி கட்சிகளின் எம்எல்ஏ-க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.