தவெக எம்எல்ஏக்கள் 3 நாள்கள் தனியார் விடுதியில் தங்க ஏற்பாடு?
சென்னை மாமல்லபுரம் தனியார் விடுதியில் தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் இன்று ஆலோசனை...
சென்னை மாமல்லபுரம் தனியார் விடுதியில் தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் இன்று (நவ. 11) பிற்பகல் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை அதிகரித்து வருவது, தவெக எம்எல்ஏக்கள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில் எம்எல்ஏக்களுக்கு முதல்வர் விஜய் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
இந்நிலையில் இன்று கூட்டம் நடைபெற உள்ள மாமல்லபுரம் தனியார் விடுதி இன்று முதல் 3 நாள்களுக்கு தவெக சார்பில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் தவெகவின் 108 எம்எல்ஏக்களும் மாமல்லபுரம் தனியார் விடுதியில் 3 நாள்கள் தங்கவைக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்எல்ஏக்கள் வெளியில் தங்காமல் இருப்பதைத் தவிர்க்க இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இன்று காலை தவெக எம்எல்ஏக்கள் காலை நடைபெறவிருந்த நிலையில் பிற்பகல் 3.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி பதவியேற்று 6 மாதங்கள் ஆன நிலையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
தொண்டர்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க நூற்றுக்கணக்கில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களுக்கும் இங்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.