FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் நாளை ஆலோசனை!

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்.

முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில், அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் விஜய் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.

தவெக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்குவதைத் தொடர்ந்து அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று (நவ. 9) கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை கண்டித்து திமுக எம்பி கனிமொழி சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

அவரது பதிவில், “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும், இதைத் தொடர்ந்து ஆட்சியருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன.

இந்தத் திறனற்ற தவெக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை என அடுத்தடுத்து நடக்கும் குற்றச்சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. இப்போது தவெக எம்.எல்.ஏ. ஒருவரால் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்க, தனிப் பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பதன் மூலம் மட்டும் தலைமைச் செயலாளர் அந்த ஆட்சியருக்கு என்ன பாதுகாப்பைக் கொடுத்துவிடப் போகிறார்?

முதல்வர் விஜய் அவர்களே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதேபோல, தண்னீர் வழங்கக் கோரியவர் மீது தாக்குதல் நடத்தியதாக சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ரவிசங்கருக்கு அதிமுக கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்குவதால், முதல்வரும் தவெக தலைவருமான விஜய், எம்எல்ஏக்களை நாளை சந்தித்து அவசர ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

summary

Reports suggest that a consultative meeting is set to take place at the TVK headquarters in Panaiyur, Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.