FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!

தவெக நிர்வாகி வீட்டில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதற்கு இபிஎஸ் கண்டனம்...

20 அக்டோபர் 2026, 12:10 pm IST
இபிஎஸ் - ENS
பகிர்:

தவெக நிர்வாகி பூபாலன் வீட்டிலிருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் முதல்வர் விஜய்யை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாகப்பட்டினத்தில் தவெக நிர்வாகி பூபாலன் வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்தது. இதையடுத்து, இந்த வழக்கில் பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

Advertisement

Advertisement

"தவெக நாகை மாவட்ட நிர்வாகி பூபாலன் தொடர்பான மாபெரும் போதைப்பொருள் வழக்கு பற்றி மத்திய நிதி அமைச்சகம் செய்தி வெளியிட்டும் இன்று வரை தமிழக முதல்வர் பதில் சொல்லாமல் மெளனம் காப்பது ஏன்?

18.10.2026 அன்று மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில், “one of the biggest narcotics seizures in Tamil Nadu’s coastal region in recent years” (சமீபத்திய ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதியில் நடந்த மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல்களில் ஒன்று) என்று கூறியுள்ளது.

இது எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா முதல்வர் விஜய்?

இது ஒரு மிகப்பெரிய போதைப்பொருள் நெட்வொர்க்காக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒரு பொறுப்பில் இருக்கின்ற முதல்வராக, குறைந்தபட்சம் ஒரு கட்சித் தலைவராக, தன் கட்சிக்காரரின் இந்த வால்டர் வொயிட் நடத்தை குறித்து ஜோசப் விஜய் வாய் திறப்பார் என்று காத்திருந்து பார்த்தால், சட்டசபையில் எதிர்கட்சி பேசும்போது எப்படி இருப்பாரோ, அதேபோல் மெளன சாமியாராகவே இருக்கிறார்.

கடந்த ஆட்சியில், ஜாபர் சாதிக் வழக்கில் மெத் போதைப் பொருளுக்கான சூடோபெட்ரின் (Pseudoephederine) என்ற மூலப்பொருள் சிக்கிய வழக்கே மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தவெக நிர்வாகி பூபாலன் வழக்கிலோ, முழுமையாக பதப்படுத்தப்பட்ட மெத் கிரிஸ்டல்களே, அதுவும் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள 137 கிலோ சிக்கி இருக்கிறது.

ஆளுங்கட்சி பின்னணியில் இவ்வளவு பெரிய சர்வதேச போதைப்பொருள் மாஃபியா நடந்திருக்கும் போது, யாருக்காக போதைப்பொருள் எதிர்ப்பு மாரத்தான் ஓடிக்கொண்டு இருந்தார் ரீல்ஸ் முதல்வர் ?

இந்த லட்சணத்தில், இதுகுறித்து செய்தி வெளியிடும் ஊடகங்களை தவெக நாகை நகரச் செயலாளர் பால்ராஜ் என்பவர் மிரட்டல் வேறு விடுக்கிறாராம்.

அப்படியென்றால், இந்த போதைப்பொருள் விவகாரம் ஆளுங்கட்சி தலைமைக்கு தெரிந்து, அவர்கள் துணையோடு தான் நடக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? உங்கள் கட்சிக்காரர் குற்றத்திற்கு பொறுப்பேற்று பதில் சொல்ல முடியாமல், ஊடகங்களை மிரட்டினால் மட்டும் செய்தி மறைந்து விடுமா?

முதல்வர் விஜய் அவர்களே, உங்கள் தகவலுக்காக, இந்த போதைப்பொருளைக் கூட உங்கள் அரசின் காவல்துறை பிடிக்கவில்லை. மத்திய அரசின் மத்திய வருவாய் புலனாய்வு அமைப்பு தான் பிடித்திருக்கிறது. இதற்கே நீங்களும், உங்கள் தலைமையிலான ஆச்சரியக்குறி அரசும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

மாற்றம் என்று சொல்லி ஆட்சியில் அமர்ந்திருக்கும் உங்களிடம் இருந்து இது பற்றி ஒரு விளக்கமாவது வருமா?” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

EPS condemns seizure of drugs from tvk executive's house

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments