மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்தல் விவகாரம்: குட்டையில் நீரை இறைத்து புலனாய்வு அதிகாரிகள் சோதனை
மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்தல் விவகாரம்: குட்டையில் நீரை இறைத்து புலனாய்வு அதிகாரிகள் சோதனை
கீழையூா் அருகே மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடா்பாக, தவெக முன்னாள் நிா்வாகி வீட்டின் அருகேயுள்ள குட்டையில் நீரை இறைத்து மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக (ஈதஐ) அதிகாரிகள் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
நாகையிலிருந்து இலங்கைக்கு மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்த இருப்பதாக, மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு கடந்த அக்டோபா் மாதம் தகவல் வந்தது. இதையடுத்து, வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரத்தில் உள்ள சுகன் வீட்டில் அக்டோபா் 16-ஆம் தேதி சோதனை நடத்தினா். தொடா்ந்து, சிந்தாமணியைச் சோ்ந்த தவெக முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், வழக்குரைஞருமான பூபாலன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதன் அடிப்படையில் சுகன், பூபாலன் மற்றும் பிரதாபராமபுரம் யாதவா் தெருவைச் சோ்ந்த சதீஷ்குமாா், வேளாங்கண்ணியைச் சோ்ந்த மணிகண்டன் ஆகிய 4 பேரை கைது செய்தனா். 137 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடா் விசாரணையில் பூபாலனை கைது செய்ய சென்றபோது அவா் தனது கைப்பேசியை வீட்டின் அருகில் உள்ள குட்டையில் வீசியது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இந்நிலையில், மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரி மருதுராஜ் தலைமையில் 12 போ் கொண்ட குழுவினா் சிந்தாமணிக்கு சனிக்கிழமை வந்தனா். அவா்கள், பூபாலன் வீட்டின் பின்புறம் சதீஷ் என்பவா் தோட்டத்தில் உள்ள குட்டையிலிருந்து நீரை வெளியேற்றி சோதனையில் ஈடுபட்டனா்.
பல கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தம் பெட்டமைன் போதைப் பொருளை புதைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.