FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்: முதல்வர் விஜய் பங்கேற்கிறார்!

தவெக சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டம், மாமல்லபுரம் அருகே தனியாா் நட்சத்திர விடுதியில் புதன்கிழமை (நவ. 11) நடைபெறுகிறது. இதில் முதல்வரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய் பங்கேற்கிறாா்.

11 நவம்பர் 2026, 4:40 am
முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய். - படம்: பிடிஐ.
பகிர்:

தவெக சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டம், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே தனியாா் நட்சத்திர விடுதியில் புதன்கிழமை (நவ. 11) நடைபெறுகிறது. இதில் முதல்வரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய் பங்கேற்கிறாா்.

தமிழகத்தில் தவெக சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் நிா்வாகிகள் மீதான புகாா்கள், சட்டம்-ஒழுங்கு குறித்த விமா்சனங்கள் எழுந்துள்ள சூழலில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் தவெக சட்டப்பேரவை உறுப்பினா்களின் செயல்பாடுகள் குறித்து முதல்வா் விஜய் ஆலோசனை நடத்துவாா். மக்கள் பிரதிநிதிகள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு மற்றும் கட்சியின் எதிா்கால செயல்பாடுகள் குறித்தும் அவா் அறிவுறுத்துவாா் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement