புகார் வந்ததும் கட்சியைவிட்டு நீக்கிவிடுவார்கள்; இப்படி ஒரு முதல்வரைப் பார்த்ததில்லை! நயினார்
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்...
மாவட்ட ஆட்சியருக்கு தகாத குறுந்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை கோரி நவ.18 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
மேலும் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரம் குறித்து அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
Advertisement
Advertisement
“இதற்கு முன் எத்தனையோ முதல்வர்களைப் பார்த்திருக்கிறோம். கட்சியில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது எனத் தகவல் வந்தாலே கட்சியை விட்டு நீக்கி உடனே நடவடிக்கை எடுப்பார்கள்.
அதிமுகவில் ஒரு சிறிய பிரச்னை என்றாலே அமைச்சர் பதவியில் இருந்துகூட நீக்கிவிடுவார்கள்.
அந்த கட்சியை சார்ந்தவர்களே அருள் விக்னேஷ் செய்திருப்பார் என கூறுகிறார்கள். ஆனால், முதல்வர் நடவடிக்கை எடுக்காமல் குழந்தைகளுக்கு கேக் ஊட்டி கொண்டிருக்கிறார். முதல்வராகவும் சரி, கட்சித் தலைவராகவும் சரி, விஜய் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கலாம்.
சட்டம் - ஒழுங்கு கையில் வைத்திருக்கக்கூடியவர் முதல்வர். முதல்வருக்கும் தவெகவினருக்கும் மனசாட்சியே இல்லையா?" என்று கேள்வி எழுப்பினார்.