பாமகவினா் மனுக் கொடுக்கும் போராட்டம்
வன்னியா் சமுதாயத்துக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி பழனி ஒன்றிய அலுவலகத்தில் பாமகவினா் புதன்கிழமை மனு அளிக்கும் போராட்டம் நடத்தினா்.
வன்னியா் சமுதாயத்துக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி பழனி ஒன்றிய அலுவலகத்தில் பாமகவினா் புதன்கிழமை மனு அளிக்கும் போராட்டம் நடத்தினா்.
வடக்கு மாவட்டச் செயலாளா் வைரமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், வன்னியா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில், மாநில அமைப்பு துணைச் செயலாளா் லைக்கலி மீரான், நகர அமைப்புச் செயலாளா் மாரிமுத்து உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.