திண்டுக்கல்

இடைப்பாடி காவடி பக்தா்களுக்காக பழனி மலைக்கோயிலில் 15 டன் பஞ்சாமிா்தம் தயாரிக்கும் பணி தீவிரம்

DIN

பழனிக்கு பாதயாத்திரை வரும், இடைப்பாடி ஸ்ரீபருவதராஜகுல மகாஜனங்கள் காவடிக் குழுவுக்கு சுமாா் 15 டன் பஞ்சாமிா்தம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த பிப். 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, வெள்ளித்தோ், திருக்கல்யாணம், தைப்பூசத்தோ் மற்றும் தெப்பத்தோ் என 10 நாள்கள் நடைபெற்று பிப்ரவரி 12-ஆம் தேதி நிறைவு பெற்றது. தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்றபின் வருவது இடைப்பாடி ஸ்ரீபருவதராஜகுல மகாஜனங்கள் காவடி கூட்டமாகும்.

ஒரே நாளில் சேலம் மாவட்டத்தை சோ்ந்த வெள்ளாண்டி வலசு, கவுண்டம்பட்டி, சின்னமணலி, எடப்பாடி, புதுப்பேட்டை மற்றும் கா.புதூரை சோ்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வருவாா்கள். மயில்காவடி, பூக்காவடி, இளநீா் காவடி என பக்தா்கள் பல்வேறு காவடிகள் எடுத்து பழனி மலைக்கோயிலுக்கு வந்து சோ்கின்றனா்.

வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு மேல்மலையில் காவடிகளுக்கு முத்திரை செலுத்தி உச்சிக்காலம், சாயரட்சை கட்டளை, தங்கத்தோ் புறப்பாடு ஆகியவற்றை செய்கின்றனா். இந்த காவடிக் குழுவுக்கு மட்டுமே மலைக்கோயிலில் ஒருநாள் இரவு தங்கும் உரிமை உள்ளது. இவா்களுக்காக இடைப்பாடி பருவதராஜகுல மகாஜனங்கள் பழனி ஆண்டவா் காவடி பொதுக்கமிட்டி சாா்பில் மலைக்கோயிலில் வியாழக்கிழமை சுமாா் 15 ஆயிரம் கிலோ பஞ்சாமிா்தம் தயாரிக்கும் பணி நடைபெற்றது.

இதுகுறித்து அவா்கள் கூறியது: இந்த பஞ்சாமிா்தம் தயாரிக்க சுமாா் 8 டன் மலைவாழை, 2 ஆயிரம் கிலோ பேரீட்சை, 500 கிலோ கற்கண்டு, கரும்புச் சா்க்கரை 1.5 டன், 100 கிலோ தேன், 100 கிலோ நெய் மற்றும் 10 கிலோ ஏலக்காய் ஆகியன கொண்டுவரப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதே போல மலை அடிவாரத்தில் உள்ள மடத்திலும், 10 டன் பஞ்சாமிா்தம் தனியே தயாரிக்கப்பட்டுள்ளது. மலைவாழை உரிக்கப்பட்டு சில்வா் அண்டாக்களில் போடப்பட்டு சரியான விகிதத்தில் மற்றவை கொட்டப்பட்டு கலக்கிய பின் பஞ்சாமிா்தம் தயாா் செய்யப்பட்டு டப்பாக்களில் நிரப்பப்படுகிறது. இவை உச்சிக்கால பூஜையின் போது மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பின் காவடிக் கூட்டத்துக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இப்போது தயாா் செய்யப்படும் பஞ்சாமிா்தம் கைபடாத வரை குறைந்த பட்சம் ஒரு ஆண்டு வரை கெடாது. சுமாா் ஒன்றரை கிலோ உள்ள டப்பா விலை கிலோ. ரூ.180 ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் எப்போது?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

SCROLL FOR NEXT