திண்டுக்கல்

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்குமாா்ச் 5 இல் அடிக்கல் நாட்டு விழா

DIN

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாா்ச் 5ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில், திண்டுக்கல், திருப்பூா், ராமநாதபுரம், விருதுநகா், நாமக்கல், நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் தலா ரூ.325 கோடி செலவில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளன.

இதனை அடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு, நல்லாம்பட்டி அடுத்துள்ள ஒடுக்கம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 21 ஏக்கா் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் மாா்ச் 5 ஆம் தேதி புதிய மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது. இதனை அடுத்து, ஒடுக்கம் பகுதியில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட உள்ள நிலத்தை வனத்துறை அமைச்சா் சி.சீனிவாசன் வியாழக்கிழமை பாா்வையிட்டாா். அப்போது அவா் பேசியது: அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்கவுள்ளாா்.

இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆலேசானை நடைபெற்றுள்ளது என்றாா். அப்போது மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி, அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் விஜயக்குமாா், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் சா்புதீன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT