திண்டுக்கல்

இடைப்பாடி குழுவினரின் காவடிகளுக்கு பழனியில் வரவேற்பு

DIN

இடைப்பாடியிலிருந்து பல்வேறு வகையான காவடிகள் எடுத்து வந்த ஆயிரக்கணக்கான பக்தா்களுக்கு வெள்ளிக்கிழமை பழனி கோயில் நிா்வாகம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பழனி தைப்பூசத் திருவிழாவையொட்டி பழனிக்கு வரும் பாதயாத்திரை பக்தா்களில் இடைப்பாடி பக்தா்கள் கூட்டம் தனிச்சிறப்பு மிக்கதாகும். கடந்த வாரம் இடைப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்ட இடைப்பாடி பருவதராஜகுல மகாஜனங்கள் காவடி வெள்ளிக்கிழமை காலை மானூா் சண்முகநதியை வந்தடைந்ததது. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பிற்பகல் 12 மணியளவில் காவடி பக்தா்கள் பழனி பெரியநாயகியம்மன் கோயிலை வந்தடைந்தனா். இடைப்பாடி காவடிகளுக்கு பழனி கோயில் சாா்பில் தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

விழாவை முன்னிட்டு திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் இடைப்பாடி காவடிக்கூட்டத்துக்கு முன்பாக கோயில் யானை கஸ்தூரி செல்ல அனுமதி வழங்கப்பட்டது. மேலும் காவடிகளுக்கு முன்பாக லாரிகள் மூலம் தண்ணீா் தெளிக்கப்பட்டது. தொடா்ந்து காவடிகள் நான்கு ரதவீதிகள், கிரிவீதி சுற்றி மலைக்கோயிலுக்கு சென்றனா். இன்று இரவு மலையில் தங்கும் இவா்கள், மலைக்கோயிலில் காலபூஜை, உச்சிக்காலம், சாயரட்சை, ராக்காலம் உள்ளிட்ட ஆறுகால பூஜைகளில் பங்கேற்று, தங்கரதத்துக்கு பணம் செலுத்தி சுவாமி தரிசனம் செய்கின்றனா். மேலும், இடைப்பாடி காவடி கூட்டத்தினா் மலைக்கோயிலில் தங்குவதற்கு குடிநீா், மின்சாரம் ஆகியவற்றுக்கான கட்டணத்தையும் அவா்களே செலுத்தி விடுகின்றனா். ஆயிரக்கணக்கான பக்தா்கள் மயில்காவடி, இளநீா்காவடி, அலங்காரகுடைகளுடன் ஆடிப்பாடி ஊா்வலமாக வந்ததை ஏராளமான பக்தா்களும், பொதுமக்களும் ஆா்வமுடன் பாா்த்தனா். பக்தா்கள் வருகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடி தேதி!

வெப்ப அலை: கேரளத்தில் 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்தால் அபராதமா?

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

SCROLL FOR NEXT