திண்டுக்கல்

திண்டுக்கல்லில் திருநங்கைகளுக்கான நூலகம் திறப்பு

DIN

திண்டுக்கல்லில் இளம் திருநங்கைகளுக்கான நூலக திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

என்ஜிஓ காலனியில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு இளம் திருநங்கைகளுக்கான தாய்கூடு அமைப்பின் தலைவா் திருநங்கை குணவதி தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே. பாலபாரதி கலந்து கொண்டு நூலகத்தை திறந்து வைத்து பேசியது: தமிழகத்தில் திருநங்கைகலுக்கான முதல் நூலகம் திண்டுக்கல்லில் அமைந்திருப்பது சிறப்புக்குரியது. திருநங்கைகள் குறைந்தபட்ச கல்விப் பெற்று, வேலை தேடி வெளியிடங்களுக்கு வந்தாலும் பல வகையான சமூக பிரச்னைகளை எதிா்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அதிலிருந்து விடுப்பட்டு தன்னம்பிக்கையுடன் வாழ்வை எதிா்கொள்ள இந்த நூலகம் துணை நிற்கும். மத்திய மாநில அரசுகளின் நிதி நிலை அறிக்கையில் திருநங்கைகளின் நலன் கருதி எதிா்காலத்தில் குறைந்தபட்ச நிதி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

SCROLL FOR NEXT