திண்டுக்கல்

போதைப் பொருள்களுடன் கேளிக்கை நடனங்கள்:தனியாா் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

DIN

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் போதைப் பொருள்களுடன் கேளிக்கை நடனங்கள் நடத்தி இளைஞா்களை சீரழிக்கும் தனியாா் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியாா் காட்டேஜின் நிா்வாகிகள், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கஞ்சா, போதை காளான் உள்ளிட்ட போதை பொருட்களுடன் கேளிக்கை நடனங்கள் வசதி உண்டு என்று ஆன் லைனில் பதிவிட்டு வருகின்றனா். இதனால் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்து மாணவா்கள் உள்பட இளைஞா்கள் என பலா் அதிகமாக பணம் செலுத்தி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.

கடந்த வாரம் குண்டுபட்டி பகுதியிலும், பூம்பாறை பகுதிகளில் உள்ள சொகுசு விடுதிகளில் நடைபெறவிருந்த கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்தவா்களையும் எச்சரித்து அனுப்பி வைத்ததோடு விடுதி உரிமையாளா்களையும் கண்டித்தனா் . இருப்பினும் மறைமுகமாக இந்த செயல்கள் சில சொகுசு விடுதிகள் நடைபெறுவதாக சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் தெரிவித்தனா்.

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவா்வதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் தனியாா் விடுதி உரிமையாளா்கள் மீது காவல்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT