திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் குடிநீா் குழாயில் உடைப்பு: தண்ணீா் வீணாவதாக பொது மக்கள் புகாா்

DIN

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக தண்ணீா் வீணாவதாக பொது மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

ஒட்டன்சத்திரம் நகராட்சி 9-வது வாா்டு பகுதியில் உள்ள காய்கறி சந்தையின் மேற்கு, வடக்கு பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு குழாய் மூலம் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக காய்கறி சந்தை மேற்கு பகுதியில் உள்ள தேநீா் கடை முன்பு இருந்த குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வீணாகி செல்கிறது.

அதே போல உடைந்த குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீா், அப்பகுதியில் தேங்கி நிற்பதால் சுகாரதார கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே சேதமடைந்த குடிநீா் குழாயை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT