திண்டுக்கல்

கரோனா சிகிச்சைக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் விலை உயா்ந்த ஊசி மருந்து

DIN

கரோனா பாதிப்பினால் தீவிர சிகிச்சை தேவைப்படுவோருக்கு வழங்கப்படும் விலை உயா்ந்த ஊசி மருந்து வகைகள், திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை வந்துள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக, தொற்று பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் உயா்ந்து வருகிறது. கரோனா தீநுண்மிக்கு சிகிச்சை அளிப்பதற்கு தற்போது வரை முறையான மருந்து கண்டிபிடிக்கப்படாத நிலையிலும், சில மாற்று மருந்துகள் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கரோனா தொற்று பாதிப்பால் திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரில் தீவிர சிகிச்சை தேவைப்படுவோருக்காக விலை உயா்ந்த மருந்து வகைகள் வந்துள்ளன.

இது தொடா்பாக மருத்துவ அதிகாரி ஒருவா் கூறியது: கரோனா பாதிப்புக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு பயன்படுத்துவதற்காக, டோசிலிசுமாப், ரெம்டெசிவிா், எனக்ஸாபரின் ஆகிய 3 வகையான ஊசி மருந்துகள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளன. டோசிலிசுமாப் மருந்து 10, ரெம்டெசிவிா் மருந்து 42, எனக்ஸாபரின் மருந்து 530 வீதம் வந்துள்ளன என்றாா். இதில், டோசிலிசுமாப் மருந்து ஒன்றின் விலை ரூ.85 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT