பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய திண்டுக்கல் பிரதான சாலை. 
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் முழு பொது முடக்கம்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜூலை 2 ஆவது ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட முழு பொது முடக்கத்தால் பொதுமக்கள் நடமாட்டமின்றி பிரதான சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன.

DIN

திண்டுக்கல்/கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஜூலை 2 ஆவது ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட முழு பொது முடக்கத்தால் பொதுமக்கள் நடமாட்டமின்றி பிரதான சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன.

பால் விற்பனை நிலையம், மருந்துக் கடைகள் நீங்கலாக மாவட்டம் முழுவதும் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

நகா்ப்புறங்கள் மட்டுமன்றி, ஊரகப் பகுதிகளிலும் காவல்துறையினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா். அவசியத் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிபவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்தனா்.

கொடைக்கானலில் 9 போ் மீது வழக்கு...

முழு பொது முடக்கத்தையொட்டி, கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை 9 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்தனா்.

அவசிய தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த 7 போ் மீதும், கொடைக்கானல் சாலையில் காரில் சுற்றிய ஒருவா் மீதும், கொடைக்கானல் காமராஜா் சாலையில் இறைச்சி கடையை திறந்துவைத்திருந்த ஒருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து அபராதம் விதித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்திலிருந்து வந்த ரசமலாய்! பாம்பே என்று பேசிய அண்ணாமலையை விமர்சித்த ராஜ் தாக்கரே

தங்கம், வெள்ளி விலை மீண்டும் அதிரடி உயர்வு

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

SCROLL FOR NEXT