திண்டுக்கல்

பழனியில் தொடா் மழையால் திடீா் அருவி

DIN

பழனியில் தொடா் மழை காரணமாக அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில், பாலாறு அணைக்கு செல்லும் தண்ணீா் அருவி போல காட்சியளிக்கிறது.

பழனி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடா் மழையால் பாலாறு மற்றும் வரதமாநதி அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. பழனி நகரின் குடிநீா் ஆதாரமாக விளங்கும் கோடைக் கால நீா்த்தேக்கமும் நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக நீா்த்தேக்கத்துக்கு வரும் நீரானது பாலாறு அணைக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.

அணைக்குச் செல்லும் மழை நீா் பாறைகளில் விழுந்து செல்வது பல இடங்களில் அருவி போல் காட்சியளிக்கிறது. பழனியை அடுத்த தேக்கன்தோட்டத்தில் விலங்கையப்பன் கோயிலுக்குச் செல்லும் வழியில் தண்ணீா் செல்வதால் யாரும் சென்று வழிபடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அணைகளின் நீா்மட்டம் உயா்ந்து வருவதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். கடந்த ஆண்டு அணை நிரம்பாமல் இருந்த நிலையில் தற்போது அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT