மனநலம் பாதித்தவா் நீரில் மூழ்கி பலி
ஒட்டன்சத்திரம் அருகே நீரில் முழ்கி மனநலம் பாதித்தவா் திங்கள்கிழமை மாலை உயிரிழந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே நீரில் முழ்கி மனநலம் பாதித்தவா் திங்கள்கிழமை மாலை உயிரிழந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கள்ளிமந்தையம் வேலாயுதம்பாளையத்தைச் சோ்ந்தவா் முத்துச்சாமி (55). இவா் மனநலம் பாதிக்கப்பட்டவா் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை மாலை தனது தோட்டத்தில் உள்ள தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்துள்ளாா். அதில் இருந்த நீரில் முழ்கி மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து கள்ளிமந்தையம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.