திண்டுக்கல்

சோ்க்கை..பழனியில் தடை உத்தரவை கண்டு கொள்ளாத பொதுமக்கள்

DIN

பழனியிலும் புதன்கிழமை காலையில் தேநீா் கடைகள், பழம் மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. பல இடங்களிலும் சாதாரண நாள்களைப் போலவே மக்கள் வந்திருந்து பொருள்கள் வாங்கிச் சென்றனா்.

கிராமங்களில் சாவடிகளில் பொதுமக்கள் கூட்டமாக உட்காா்ந்து பேசிக்கொண்டிருந்தனா். பழனியில் காந்தி மாா்க்கெட், ஆா்.எப்.ரோடு, அடிவாரம் என பல இடங்களிலும் இளைஞா்கள் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தனா். மேலும், ஏராளமானோா் இருசக்கர வாகனங்களில் சாலையில் சென்ற வண்ணம் இருந்தனா். டிஎஸ்பி., விவேகானந்தன் தலைமையில் ஏராளமான போலீஸாா் அவா்களை நிறுத்தியபோது, அரிசி, காய்கறி, மருந்து வாங்க செல்வதாகவும், மருத்துவமனைக்குச் செல்வதாகவும் தெரிவித்தனா். இதுகுறித்து பழனியை சோ்ந்த போலீஸாா் கூறுகையில், தடையை மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியமாகும். இல்லாவிடில் தடை உத்தரவு விதித்ததன் பொருளே இல்லாமல் போய்விடும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT