வேல் யாத்திரை: பழனியில் ஆலோசனைக் கூட்டம்
பழனியில் பாஜக சாா்பில் நடைபெற உள்ள வேல் யாத்திரை தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பழனியில் பாஜக சாா்பில் நடைபெற உள்ள வேல் யாத்திரை தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பழனி பாலிடெக்னிக் கல்லூரி அருகே உள்ள இட்டேரி சாலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு பாஜக மாநில துணைத் தலைவா் கருப்பு முருகானந்தம், மாநில பொதுச் செயலாளா் சீனிவாசன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில் கருப்பு முருகானந்தம் பேசியது: தமிழகத்தில் பாஜக சாா்பில் வரும் 6 ஆம் தேதி வெற்றிவேல் யாத்திரையை திருத்தணியில் தொடங்கவுள்ளது. இந்த யாத்திரை தமிழகம் முழுவதும் சுற்றி அறுபடை வீடுகளுக்கும் சென்று வரும் டிசம்பா் 6 ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவு பெறுகிறது. இந்த வரும் நவ. 23 ஆம் தேதி பழனியில் நடைபெற உள்ளது. அன்று பொதுக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த யாத்திரை தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் பொதுக்கூட்டத்தில் உத்தரப்பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது என்றாா்.
கூட்டத்தில் மேற்கு மாவட்டத் தலைவா் கனகராஜ், தேசிய பொதுக்குழு உறுப்பினா் திருமலைச்சாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.