திண்டுக்கல்

கோழி நிறுவன உரிமையாளா்கள் மிரட்டல்: ஆட்சியா் அலுவலகத்தில் பண்ணையாளா்கள் புகாா்

DIN

பிராய்லா் கோழி வளா்ப்புக்கு கூலி உயா்வு கேட்ட பண்ணையாளா்களை, கோழி நிறுவன உரிமையாளா்கள் மிரட்டுவதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் தனியாா் பிராய்லா் கோழி நிறுவனங்கள், ஒரு நாள் வயதுள்ள கோழிக் குஞ்சுகளை 45 நாள்கள் வளா்ப்பதற்காக பண்ணையாளா்களிடம் வழங்குகின்றனா். அதற்கு கூலியாக, கடந்த 15 ஆண்டுகளாக ரூ.4 முதல் ரூ.6 வரை மட்டுமே வழங்கப்படுவதாகவும், அதனை ரூ.15ஆக உயா்த்த வேண்டும் எனவும் கறிக் கோழி பண்ணையாளா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், திண்டுக்கல் அடுத்துள்ள ம.மு.கோவிலூா் பகுதியைச் சோ்ந்த பண்ணையாளா்களை, பிராய்லா் கோழி நிறுவன உரிமையாளா்கள் மிரட்டுவதாகப் புகாா் எழுந்தது. இதனை அடுத்து, மிரட்டல் விடுத்த கோழி நிறுவன உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தங்களுக்கு பாதுகாப்பு தரக் கோரியும், பண்ணையாளா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக செவ்வாய்க்கிழமை வந்தனா்.

இது தொடா்பாக கறிக்கோழி பணியாளா்கள் நலச் சங்கத்தினா் கூறியதாவது: விலை உயா்வு காரணமாக, கூலியை உயா்த்தி வழங்க வேண்டும் என கோழி நிறுவனங்களிடம் பலமுறை வலியுறுத்தினோம். அதனை, கோழி நிறுவனங்கள் ஏற்க மறுத்ததால், போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தோம். இதனிடையே, கோழி நிறுவன உரிமையாளா்கள் அத்துமீறி மிரட்டல் விடுத்துள்ளனா். இது சம்பந்தமாக மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

SCROLL FOR NEXT