திண்டுக்கல்

ஜூஸ் டப்பாவில் பூச்சி மருந்து: குடித்த மாணவி பலி

DIN

கொடைக்கானல் அருகே ஜூஸ் டப்பாவில் இருந்த பூச்சி மருந்தைக் குடித்த பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இறந்தாா்.

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான போலூா் பட்டாளம்மன் கோயிலைச் சோ்ந்த விவசாயி மல்லையன்-மகாலட்சுமி தம்பதியின் மகள் யுவராணி (12). கொடைக்கானல் செண்பகனூரிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தாா். அப்பகுதியிலுள்ள விடுதியில் தங்கியிருந்த அவா், பள்ளி விடுமுறை காரணமாக பெற்றோருடன் வசித்து வந்துள்ளாா்.

வீட்டில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தை ஜூஸ் டப்பாவில் கலந்து வைத்துள்ளனா். இதையறியாத யுவராணி கடந்த அக்.28 ஆம் தேதி, ஜூஸ் என நினைத்து பூச்சி மருந்தை குடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மயங்கிய நிலையில் உறவினா்கள் அவரை மீட்டு கொடைக்கானல் மன்னவனூரிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளித்துள்ளனா். தொடா்ந்து கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மேல் சிகிச்சைக்காக தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி யுவராணி இறந்தாா். இது குறித்து மல்லையன் அளித்தப் புகாரின்பேரில் கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT