வெள்ளகவி மலைக்கிராமத்திற்கு சாலை வசதி கோரி கிராமமக்கள் மனு
கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள வெள்ளகவி மலைக்கிராமத்திற்கு சாலை வசதி அமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் கும்போஸ்வரருக்கு பூஜை செய்து, தேவதானப்பட்டி வனச்சரக அலுவலரிடம் இன்று மனு அளித்தனர்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள வெள்ளகவி மலைக்கிராமத்திற்கு சாலை வசதி அமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் கும்போஸ்வரருக்கு பூஜை செய்து, தேவதானப்பட்டி வனச்சரக அலுவலரிடம் இன்று மனு அளித்தனர்.
பெரியகுளத்தில் இருந்து வெள்ளகவி மலைகிராமத்திற்கு சாலை வசதி கோரி வெள்ளகவி விவசாய சங்க செயலாளர் சண்மூகம் தலைமையில் சனிக்கிழமை காலை கும்பக்கரையில் உள்ள கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள சுவாமிக்கு மாலை அணிவித்து, அர்ச்சனை செய்து சாலை வசதி விரைவில் செய்துதரக்கோரி வேண்டுகோள் வைத்தனர். பின்னர் தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர் டேவிட்ராஜனிடம் கோரிக்கை மனுவை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் 100க்கு மேற்பட்ட வெள்ளகவி கிராமமக்கள் கலந்து கொண்டனர்.
வெள்ளகவி விவசாய சங்க செயலாளர் சண்மூகம் தெரிவித்தாவது, பழனிமலைத்தொடரில் கொடைக்கானல் நகர் உருவாவதற்கு முன் உருவான கிராமம் வெள்ளகவி. இந்த கிராமத்தின் வழியாக பூம்பாறை, பூண்டி, கிளாவரை மக்கள் சென்று வந்தனர். ஆங்கிலோயர்கள் கொடைக்கானல் நகரை உருவாக்கியபோதும் இந்த வழியாக ஆங்கிலோயர்கள் குதிரையில் சென்று வந்தனர். வத்தலக்குண்டு வழியாக சாலை வசதி உருவான பின் இப்பகுதி வழியாக கொடைக்கானல் செல்வது குறைந்தது. அதன் பின் தற்போது அடுக்கம் வழியாக கொடைக்கானலுக்கு சாலை வசதி ஏற்படுத்தப்பட்டது.
Advertisement
வெள்ளகவி வழியாக பெரியகுளத்தில் இருந்து 25 கி.மீ தூரத்தில் கொடைக்கானலை சென்றடையலாம். இதனையடுத்து எம்ஜிஆர் காலத்தில் இரண்டு கி.மீ தூரத்திற்கு சாலை மற்றும் பாலம் அமைக்கப்பட்டது. அதன்பின் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கு டோலி அமைத்து தூக்கி செல்ல வேண்டிய நிலையில் உள்ளது. அதே போல் அப்பகுதியில் விளையும் காய்கறிகளை குதிரையின் மூலம் சுமையாக எடுத்து வரவேண்டி உள்ளது.
இதனால் போக்குவரத்து செலவு அதிகரிக்கிறது. எனவே வெள்ளகவி கிராமத்திற்கு சாலை வசதி அமைத்து தரவேண்டும் என்றார்.