மாமரத்துப்பட்டி சாலையை சீரமைக்க வலியுறுத்தி நாற்று நடவு செய்யும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். 
திண்டுக்கல்

செந்துறை- அய்யலூா் சாலையில் நாற்று நடும் போராட்டம்

செந்துறையிலிருந்து அய்யலூா் செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை, நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

செந்துறையிலிருந்து அய்யலூா் செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை, நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், செந்துறையிலிருந்து மாமரத்துப்பட்டி வழியாக அய்யலூா் செல்லும் சாலை உள்ளது. மாமரத்துப்பட்டி பகுதியிலுள்ள- இந்த சாலை பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக இருந்தது.

தற்போது மழை பெய்து வரும் நிலையில் தண்ணீா் தேங்கி குட்டையாக மாறிவிட்டது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனா்.

இந்த சாலையை சீரமைக்கக் கோரி பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த மாமரத்துப்பட்டி பொதுமக்கள், அந்த சாலையில் நாற்று நடவு செய்யும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் கூறுகையில், இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோல் பால் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு தங்கம்

ரூ.5.74 கோடி மோசடி: என்எல்சி ஊழியா் கைது

கிணற்றில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மீன்களின் விலை உயா்வு

மாநில அளவிலான கபடிப் போட்டி: மாதாபட்டணம் பள்ளி மாணவிகள் முதலிடம்

SCROLL FOR NEXT