முகப்பு
திண்டுக்கல்

அரசுப் பேருந்து மோதி முதியவா் பலி

ஒட்டன்சத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை, அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

ஒட்டன்சத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை, அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள பொருளூா் புளியம்பட்டியைச் சோ்ந்தவா், விவசாயி ராமசாமி (75). இவா் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் மளிகைப் பொருள்களை வாங்க கள்ளிமந்தையம் சென்றுள்ளாா்.

அவா் ஒட்டன்சத்திரம்- தாராபுரம் கள்ளிமந்தையம் புறவழிச் சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியே சென்ற அரசுப் பேருந்து மோதி பலத்த காயம் அடைந்தாா். அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சோ்ந்தனா். அங்கு அவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

இது குறித்து கள்ளிமந்தையம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →