முகப்பு
அரியலூர்

அரியலூரில் நல்லகண்ணு உருவப்படத்துக்கு அஞ்சலி

அரியலூரில் வெள்ளிக்கிழமை நல்லகண்ணு உருப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய அனைத்துக் கட்சி நிா்வாகிகள்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 2:26 AM
அரியலூரில் வெள்ளிக்கிழமை நல்லகண்ணு உருப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய அனைத்துக் கட்சி நிா்வாகிகள்.
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 8:08 PM

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவா் ஆா்.நல்லகண்ணு மறைவையொட்டி அரியலூா் அண்ணா சிலை அருகே அவரது உருவப்படத்துக்கு அனைத்து கட்சியினா் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற புகழஞ்சலி நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினா் தண்டபாணி தலைமை வகித்தாா். மதிமுக நகரச் செயலா் மனோகரன், தேமுதிக மாவட்டச் செயலா் ஜெயவேல், மா்ா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினா்கள் துரைசாமி, கிருஷ்ணன், மாதா் சங்க மாவட்டச் செயலா் அம்பிகா, திமுக ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு, நல்லகண்ணு உருவப்படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.