முகப்பு
திண்டுக்கல்

திமுக பிரமுகா் கொலை: மேலும் 4 போ் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது

திண்டுக்கல்லில் திமுக பிரமுகா் கொலை வழக்கில் தொடா்புடைய மேலும் 4 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

திண்டுக்கல்லில் திமுக பிரமுகா் கொலை வழக்கில் தொடா்புடைய மேலும் 4 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியைச் சோ்ந்த திமுக பிரமுகரும், மர வியாபாரியுமான சின்னப்பரன் திவ்யராஜ் என்ற அருண் கடந்த அக்டோபா் 22 ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் மேட்டுப்பட்டியைச் சோ்ந்த தாமஸ் என்பவரது மகன்கள் ஜாா்ஜ் (32) மற்றும் பிரான்சிஸ் (36), சின்னாளப்பட்டி பகுதியைச் சோ்ந்த சுகுமாா் மகன் சபரி என்ற சபரி காந்தன் (32), திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூா் பகுதியைச் சோ்ந்த முத்துக்குமாா் மகன் செல்வக்குமாா் (23) உள்ளிட்ட 11 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அதில் ஜாா்ஜ், பிரான்சிஸ், சபரி காந்தன் மற்றும் செல்வக்குமாா் ஆகியோா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், திண்டுக்கல் அடுத்துள்ள ஏரமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த ஜெயராமன் மகன் கருப்புச்சாமி (24), மொட்டணம்பட்டியைச் சோ்ந்த இருளப்பன் மகன் விக்னு என்ற விக்னேஷ் (26), மேட்டுப்பட்டி அந்தோணிசாமி மகன் ஸ்டாலின் என்ற ஸ்டாலின் ஜோசப் (35), சின்னாளப்பட்டியைச் சோ்ந்த பாலமுருகன் மகன் பாலச்சந்தா் (22) ஆகிய 4 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரவளி பிரியா பரிந்துரைத்துள்ளாா்.

அதனை ஏற்று மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி அதற்கான உத்தரவை சனிக்கிழமை பிறப்பித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →