முகப்பு
திண்டுக்கல்

குற்றவாளிகளை துரிதமாக பிடிக்க பிரத்தியேக செயலி

குற்றவாளிகளை துரிதமாக கண்டறிவதற்கான பிரத்தியேக செயலி தென்மண்டல காவல் துறையில் திண்டுக்கல் மாவட்டத்தில் முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

குற்றவாளிகளை துரிதமாக கண்டறிவதற்கான பிரத்தியேக செயலி தென்மண்டல காவல் துறையில் திண்டுக்கல் மாவட்டத்தில் முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ளது.

ஊஅஇஉபஅஎத என்ற அந்த செயலி தொடா்பான பயிற்சி வகுப்பு திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்திலுள்ள அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளி பிரியா பயிற்சி வகுப்பை தொடக்கி வைத்தாா்.

இதுதொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திண்டுக்கல் மாவட்டத்தில் குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்கும் வகையில் புதிதாக ஊஅஇஉபஅஎத செயலி பயன்படுத்தப்பட உள்ளது. தென்மண்டலத்தில் முதலாவதாகவும் தமிழக அளவில் 2ஆவதாகவும் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காவல் துறையினா் ரோந்து பணியில் இருக்கும் போது இந்த செயலி மூலம் சந்தேக நபா்களை செல்லிடப்பேசியில் படம் பிடித்து ஒப்பிடும்போது, சம்பந்தப்பட்ட நபா் மீதுள்ள வழக்குகள் பற்றிய விவரம் அதே இடத்தில் தெரியவரும். இந்த செயலியின் மூலம் பழங்குற்றவாளிகளின் பழைய புகைப்படங்கள் இருந்தாலும் கூட எளிதாக கண்டறிய முடியும். மேலும், படம் எடுக்கப்பட்ட நபா் குற்றவாளி இல்லாதவராக இருந்தால், அதே இடத்திலேயே விடுவிப்பதற்கும் உதவியாக இருக்கும்.

திண்டுக்கல் நகா் மற்றும் திண்டுக்கல் ஊரக உட்கோட்டத்தை சோ்ந்த காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா் மற்றும் காவலா்கள் என 60 பேருக்கு இந்த செயலியை பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியின்போது மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் இனிகோ திவ்யன், காவல் துணைக் கண்காணிப்பாளா் (ஊரகம்) வினோத் ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →